மேல்வீடு - ஓட்டு வீடு - புல்வீடு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நீட்டையுறு மேல்வீடு நீணிலவெப் போடுபல
வேட்டை யொழிக்குங்காண் மிக்கெழிலால் - ஓட்டையுறு
கல்வீ(டு) உயர்வெனினுங் காலிமஞ்சா ராநலத்தாற்
புல்வீ(டு) உயர்வாம் புகல்

- பதார்த்த குண சிந்தாமணி

பொருளுரை:

உயர்ந்த மெத்தை வீடானது விடவுயிர், மிருகம் இவற்றால் உண்டாகிற பலவித துன்பங்களை நீக்கும். ஓட்டுத் தடுக்குள்ள கல்வீடானது அழகால் உயர்ந்தாலும் காற்று, பனிசாராமையால் விழல் தடுக்கு வீடே
உயர்வானதாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Dec-22, 7:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே