என் தோழன் என் மீனவன்

புயலுக்கும் பேர் வைத்தான்.
ஒரு பயலுக்கும் தெரியாது
பெயரைப்போல புயல் இருக்காதென்று.

- 1-

மீனிருக்கும் திசை நோக்கி,
சிரமம் ஏதுமின்றி சிறுபடகில்,
சிறுவலை கொண்டு மாலுமியாய்,
பெரும் மீன் பிடிக்க தன்னந்தனியாய்,
பலம் கொண்டு கலம் செலுத்தி,
வானம் கணித்து வலை விரித்தான் .


-2-

நீலம் கலங்கி கருங்கடல் பொங்கி,
வாடை குறைந்து பெருங்காற்று புலப்பட்டது .
வலை பிடிக்க வலையின் வால் பிடித்தான்.
இழுக்க இழுக்க வலையோடு மீன் விழுந்தது.
மனம் நிரம்பி வேகம் பிறந்தது.
பதட்டமும் சேர்ந்தே வளர்ந்தது.

-3-

வளை கொண்டவளை வலையில் கண்டான்.
தன்னுயிர்க் கொண்டவள் ஈருயிராய் இருப்பவள்.
மகனோ ! மகளோ ! ஆசையின் அரவணைப்பு.
மயிரிழையில் உயிர்போல ஊசலாட்டம்.
அவனுக்கிங்கே, அவளுக்கங்கே.
கலமெங்கும் நீராயிற்று, மனமெங்கும் இருளாயிற்று.

-4-

வீசும் காற்றும் பெய்யும் மழையும்,
பொய்யெனப் போகாதோ, தவிப்பும் தீராதோ.
அமிழ்ந்து எழுந்த அலைகளில் பயம் தெளிந்து,
வலை புகுந்த மீனை பத்திரப் படுத்தி,
நிலைகொள்ளா கலனை தன்னுள் நிறுத்தி,
தன்கையே தனக்குதவி என்று கரை நோக்கி
விசை கூட்டினான். தன் தசை நம்பி.


அவனே என் தோழன் நம் மீனவன் ….

எழுதியவர் : தருவை .அந்தோணி லாரன்ஸ் (27-Dec-22, 9:11 pm)
பார்வை : 37

மேலே