வருடத்தின் இறுதிநாள்
இன்றே இறுதிநாள்
உனக்கும் எனக்குமான
பந்தத்தில் இன்றே
இறுதிநாள்..!
நீயும் நானும் கைகோர்த்து
ஓர் நொடி விலகாமல்
வழிநடந்த பயணத்தின்
இறுதி நாள்..!
கவலைகள் பகிர்ந்து
கதைத்து மகிழ்ந்து
காதலில் கரைந்த
கடைசி நாள் இன்று..!
இனி நமக்குள்
சந்திப்பே இல்லை
இதயத்தில் ஏதோ
இனம் புரியா இறுக்கம்..!
விடை கொடுக்கிறேன்
2022 எனும் என் இனியவளே
உன் முற்றுப்புள்ளியில் பிறந்த
2023 எனும் புதியவளை
வரவேற்க வாசல் திறக்கிறேன்..!
வருடத்தின் இறுதிநாள்..!
31.12.2022