கசகசா கசமுசா
முதலாளி: ஏம்பா ரொம்ப லேட்டா வர்ர ஆபிஸுக்கு?
ஊழியர்: பஸ்ஸை விட்டுட்டேன் சார்
முதலாளி: முதலில் உன்னை யார் அதை புடிச்சிக்க சொன்னது!
ஊழியர்: ???
&&&
அதிகாரி டைப்பிஸ்ட்டிடம் "ஏம்மா, ஒரு பக்கம் லெட்டர் டைப் பண்ண சொன்னா அம்பது தப்பு பண்ணியிருக்கே. நீ டைபிஸ்ட்டா இல்ல தப்பிஸ்ட்டா?
டைப்பிஸ்ட்: ???
&&&
ஆடிட்டர்: ஏன் சார், இந்த வவுச்சருக்கு சரியான பில்லே இல்லை. வவுச்சர்ல கசகசா 1000 ரூபாய், கசமுசா 9000 ரூபாய்ன்னு போட்டிருக்கு.
குமாஸ்தா: அது ஒன்னும் இல்லை சார், கசகசாவை கொஞ்சம் தண்ணீரில் கலந்து குடிச்சா நல்லதுன்னு என் மேனேஜருக்கு யாரோ சொன்னாங்க.
ஆடிட்டர்: அப்படீன்னா தண்ணீர் விலை 9000 ரூபாயா?
குமாஸ்தா: அது சாதாரண கார்ப்பரேஷன் தண்ணீர் இல்லை சார். கொஞ்சம் விலை உயர்ந்த தண்ணீர். ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலிலிருந்து வாங்கி மேனேஜர் வாங்கி வந்தாரு. வரும் வழியில் அந்த தண்ணீரில் இந்த கசகசாவைக் கலந்து குடித்துவிட்டார். அதுக்கு அப்புறம் அவர் அந்த தண்ணீர் பில்லை எங்கேயோ விட்டுவிட்டார். அதனால தான் வவுச்சர்ல கசமுசா செலவு 9000 ரூபாய்னு போட்டிருக்கோம்.
ஆடிட்டர்: அப்படீன்னா எனக்கும் கசமுசாவில் கொஞ்சம் கசகசா கலந்து கொடுங்க.
குமாஸ்தா: ???
&&&
பயணி: ஏம்பா இப்படி அநியாயம் பண்ணுறீங்க, மீட்டர் பிரகாரம் 395 ரூபாய்தான் ஆயிருக்கு. நீங்க என்னடான்னா 500 ரூபாய் கேட்கறீங்க.
டாக்ஸி ஓட்டுநர்: ஐயா, நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க. நீங்க ஐநூறு ரூபாய் நோட்டு கொடுத்தா மீதி சில்லறையை நான் தருவேன்.
பயணி: ???
&&&
ஆசிரியர்: உனக்கெல்லாம் கணக்கே வரமாட்டேங்குது. நீயெல்லாம் என்ன பண்ணபோறியோ?
மாணவன்: கணக்கு பண்ணுவேன் சார்.
ஆசிரியர்: ???
&&&
ஆசிரியர்: ஏண்டா மாடு மாதிரி சத்தம் போடறே, வீட்டில என்ன புண்ணாக்கா தின்னுறே?
மாணவன்: சார், கழுதை மாதிரி நீங்க பேசறீங்க. வீட்டுல காகித்தையா சாப்பிடறீங்க?
ஆசிரியர்: ???
&&&
ஆசிரியர்: எவண்டா அது, ராட்சசன் மாதிரி கர்ணகடூரமா சத்தம் போடுறது?
ஒரு மாணவன்: சார், என் செல் போனை மியூட் பண்ண மறந்துவிட்டேன். அதான் ரிங் சவுண்ட்.
ஆசிரியர்: மொதல்ல அந்த ரிங் டோனை மாத்திதொலைடா. கேட்கவே பயமாக இருக்குது.
மாணவன்: ???
&&&
ஒரு கல்யாண சாப்பாட்டில்
உண்பவர்: என்ன பாயாசத்துல சர்க்கரை போட்ட மாதிரியே இல்லை?
பரிமாறுபவர்: அப்போதான் பின்னால சர்க்கரை வியாதி வராம இருக்கும்.
உண்பவர்: ???
&&&
உண்பவர்: என்ன சாம்பார்ல ரெண்டு தடவை உப்பு போட்டீங்களா? ஒரேடியாக உப்பு கரிக்குது.
பரிமாறுபவர்: சார், உப்பு சாப்பிட்டாதான் ரோஷம் இருக்கும். கொஞ்சம் உப்பு தூக்கலாக இருந்தால் இன்னும் நல்லாவே ரோஷம் இருக்கும்.
உண்பவர்: ???
&&&
உண்பவர்: ஏன்யா, போனபந்தி வரைக்கும் எல்லோருக்கும் வாழை இல்லை போட்டுத்தான் பரிமாறினீங்க, இப்போ நான் சாப்பிடும்போது இவ்வளவு சின்ன வாழைப்பூ இலைல பரிமாறுகிறீர்களே, ஏன் இந்த அநியாயம்?
பரிமாறுபவர்: ரெண்டு எருமை மாடு திடீரென்று சமையல் அறையில் நுழைந்து வாழை இலைகளை தின்றுவிட்டது. அதனால் தான் இந்த வாழைப்பூ இலையில் போடுறோம்.
உண்பவர்: அப்படீன்னா, அதோ அங்கே ஒரு கட்டு வாழை இலை இருக்கே அது யாருக்கு?
பரிமாறுபவர்: எங்களுக்கும், இலையை எடுக்கும் ஆட்களுக்கும்
உண்பவர்:???
&&&