அலிகள் ஆண்மையை விரும்பும்

நேரிசை வெண்பா

கோபுர உச்சிநிழல் ஒத்துக்கீழ் வீழாதே
காப்புசெய் ராஜராஜன் மாமேதை -- கூப்பி
சிவனை யுலகுதொழ செய்தானே வீரன்
அவன்புகழ் பாடான் அலி

அலிகள் விரும்புவர் ஆண்மையையும் யேனோ
புலியின் கொடியானை போற்றார்-- எலிகள்
நலிந்தும் கெடுக்கும் மலிந்து பொலிவை
கலிக்குமிக லையும் அலி

இகலர் = வீரர்


ஆண்மையை விரும்புவர் அலிகள். ஆனால் தமிழ் நாட்டின் அலிகளுக்கு ராஜராஜனை ஏனோ இன்று பிடிக்கவில்லை
அவர்களுக்கு அரசனும் பிடிக்கவில்லை அரசனின் பக்தியும் பிடிக்கவில்லை. காரணமும் அவர்க்கே வெளிச்சம். இன்று இந்த
எலிகள் (கலிக்கும் = அழைக்கும்) நலிந்து கெட்டாலும் பொழிவான
அரசரையும் வீணாக அழைத்து வீரத்தைப் பழிக்கிறது.

எழுதியவர் : பழனி ராஜன் (4-Jan-23, 6:38 pm)
பார்வை : 64

மேலே