நீசிரிக்க பூத்த பூவெல்லாஞ் சிரித்தது
கவின் சாரலர் எழுதியது
திரும்பிப் பாராமல் விரைந்தது தென்றல்
அரும்பிய மொட்டுக் களுக்கு வருத்தம்
விரும்பிப் பார்த்தாய் இதழ்விரித்து சிரித்தாய்
அரும்புகள் ஆயிரமாய் கொல்லென பூத்தன !
பழனி ராஜன் எழுதியது
வாய்ப்பாடு
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்/காய்
திரும்பவும் மறந்ததென் விரைந்ததென் தென்றலேகாண்
அரும்புமொட் டுமொத்தமும் வருந்துதும் விடிந்துங்காண்
விரும்பியும் திரும்பிநின் இதழ்விரித் துசிரிக்க
அரும்புகள் கொப்பெனவே யனைத்தும் மலர்ந்தனவே
எல்லா முதல் சீரிலும் "ரு," எதுகையானது
முதல் வரியில் ஒன்று மூன்று சீரில் தி.... வி
இரண்டாவது வரியில் ஒன்று மூன்று சீரில். அ..... வ
மூன்றாவது வரியில் ஒன்று மூன்று சீரில். வி..... இ
நான்காவது வரியில் ஒன்று மூன்று சீரில். அ.......ய.
ஈற்றடியில் இரண்டாம் சீர் காயாக மூன்றாம் சீர் புளிமா வாகியது.
கரு விளமே மூன்றில் வரவும் தவறில்லை
கருவிளங்கள் குறிலில் முடிய சிறப்பென்பர். யாப்பை அறிந்தவர்.
தவறென சுட்டிக்காட்டின் திருத்திக் கொள்கிறேன் . அது என் கடமை.
தம்பி கவின் சாரலர் எழுதிய பாடலில் கலிவிருத்தம் வாய்ப்ப்பாடு ஒன்றிலும் பொருந்தவில்லை ஆகையால் அந்த வரிகளை கலிவிருத்த வாய்ப்பாட்டில் தொடுத்துள்ளேன். கலிவிருத்தம் எழுத்தின் தளத்தில் இன்று எழுத யாருமில்லை . யாப்பு ஆர்வலர் எழுத்தில், இல்லையென்று தவறாய் எழுதுதல் தவறென்றே பட்டதால திருத்தி அமைத்துள்ளேன். கொல்லென சிரிப்பார் என்று சிரிப்பதைச் சொல்வர்
கொப்பெனப் பூக்கும். என்று பூ மலர்தலைக் குறிப்பது வழக்கம்.