பொல்லாத பார்வை பொழில் - இன்னிசை வெண்பா

இன்னிசை வெண்பா
(1, 3 சீர்களில் மோனை)

மெல்லிடைப் பூவசைவில் மேனகை தோற்றிடுவாள்;
சொல்லும் மொழியாளே! சொக்கியே நின்றேனே!
வெல்லும் விழிகளில் விந்தையே காண்கின்றேன்;
பொல்லாத பார்வை பொழில்!

கருத்துதவி: கவின் சாரலன்

*பொழில். சோலை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jan-23, 8:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 79

மேலே