எதிர்பாராததை எதிர்கொள்

இது வரை சந்திக்கா ஒன்றினை
எதிர் கொள்ள நேரும் நேரம்
அதனை கையாளும் விதம் தனுள்
ஓர் கலை நயம் உள்ளடங்க
வாழ்வின் மீதே உன்னதம் தன்னை
உணர கூடும்...
என்னால் இயலும்
என்னும் எண்ணம்
என்றென்றும் தோன்றும்
*அபிராமி விஜயராகவன்*

எழுதியவர் : அபிராமி விஜயராகவன் (4-Jan-23, 10:44 pm)
பார்வை : 98

மேலே