என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
துன்பங்கள் துளைத்துத் தாக்கட்டுமே
தன்னாலே சரிவரும் தயங்காதே
ஆத்மா இருக்குது மயங்காதே
உள்ளே ஆத்மா இருக்குது மயங்காதே!

முன்னாலே தெரிவது எதிர்காலம்
பின்னாலே மறைந்தது கடந்தகாலம்
ஆனந்தமாய் வாழ நிகழ்காலம்
இதில்தானே உன் எதிர்காலம்!
இதில்தானே உன் எதிர்காலம்!

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
துன்பங்கள் துளைத்து தாக்கட்டுமே
தன்னாலே சரிவரும் தயங்காதே
ஆத்மா இருக்குது மயங்காதே
உள்ளே ஆத்மா இருக்குது மயங்காதே!

இன்பங்கள் துன்பங்கள் சரிபாதி
ஜனநாயகத்தில் சமநீதி
நடுவினில் ஏன் இந்த மதம் சாதி
அன்பே வாழ்க்கையின் பொது வீதி
அன்பே வாழ்க்கையின் பொது வீதி

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
துன்பங்கள் துளைத்து தாக்கட்டுமே
தன்னாலே சரிவரும் தயங்காதே
ஆத்மா இருக்குது மயங்காதே
உள்ளே ஆத்மா இருக்குது மயங்காதே!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (5-Jan-23, 4:16 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 92

சிறந்த கவிதைகள்

மேலே