நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் – அறநெறிச்சாரம் 214

நேரிசை வெண்பா

அளற்றகத்துத் தாமரையாய் அம்மலரீன் றாங்கு
அளற்றுடம் பாமெனினும் நன்றாம் - அளற்றுடம்பின்
நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்றவை
தன்னால் தலைப்படுத லான். 214

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

சேற்றினிடத்து வளர்ந்த தாமரை அழகிய மலர்களை ஈனுதல் போல, தூய்மையில்லாத உடம்போடு கூடி வாழ்ந்தும் நன்ஞானம் நல்லறிவு நல்லொழுக்கம் என்பன ஒருவனால் அடையக்கூடுமாதலால் உடம்பு அசுதமானது எனினும் அதனோடு கூடி ஒழுக்கமாக வாழ்தலே நல்லது எனப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jan-23, 5:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே