பொய்ச்சுற்றத்தாரால் வரும் துயரம் - அறநெறிச்சாரம் 213
நேரிசை வெண்பா
மக்களே பெண்டிர் மருமக்கள் தாய்தந்தை
ஒக்க உடன்பிறந்தார் என்றிவர்கள் - மிக்க
கடும்பகை யாக உழலும் உயிர்தான்
நெடுந்தடு மாற்றத்துள் நின்று. 213
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
தனது மக்களும், மனைவியரும், மருமக்களும் தாய்தந்தையரும், தன்னுடன் பிறந்த உடன்பிறப்புகள் எனப்பட்ட அனைவரும். இன்பம் பயப்போர் போன்றே பகையுணர்வுடன் மிகக் கொடிய துன்பத்தையும் செய்யலாம்.
ஆதலால், மனித வாழ்க்கையில் மிக்க கலக்கத்துடனும், தடுமாற்றத்துடனும் உலக வாழ்க்கையில் இடைப் பட்டு உயிரானது வருந்தும் என எச்சரிக்கப்படுகிறது.