புதிராய் ஒரு வாழ்வு
ஏனோ சில நினைவுகள்....
ஏதோ சில கவலைகள்....
அவ்வப்போது வந்து என் இதயத்தை
வருடிச்செல்லும்...
வருவதற்கான காரணமும் தெரியாது,
கண்ணெதிரே காணவும் முடியாது,
தொட்டுப்பார்க்கவும் இயலாது,
தெரியாது!முடியாது!! இயலாது!!!
ஆனாலும் புரிகிறது
தொண்டைக் குழியிலிருக்கும்
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
நெஞ்சுக்குழிக்குள்
புதைந்திருக்கும் புதிர்கள் என
விடைமட்டும் புரியா புதிராகவே
நெடுங்காலமாய் நிலைபெற்று
கடக்கு நினைவாய்!!!