கவின்சாரலரின் சிறப்புப் புதுக்கவிதை அருமை

நயனங்களின் ஆடலில் கயல்களின் சலனம்
கூந்தலின் ஆடலில் தென்றலின் சலனம்
புன்னகை இதழ்களில் முத்துக்களின் ஆடல்
என் கவிதையில் தினம் உன் அழகின் அரங்கேற்றம்

வேறு வடிவினிலும் .....

உன்நயனங் களின்ஆட லில்கயல் களின்சலனம்
பொன்கூந்த லின்ஆடலில் தென்றலின் சலனம்
புன்னகை இதழ்களில் முத்துக்களின் ஆடல்
என்கவிதையில் தினம்உன் அழகின் அரங்கேற்றம்

உன்நய னாடல் தனில்கய லின்சலனம்
பொன்கூந்த லாடலில் தென்றல்தன் மென்சலனம்
புன்னகை பூவிதழில் முத்துக் களினாடல்
என்கவிதை தன்னில் அரங்கேற்றம் உன்னழகு
மின்னல் விழியழ கே
இந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்

குறள் வெண்பா

மொத்தம் தமிழின் புதுக்கவிதை தெங்காலின்
சுத்தவிளக்கம் மூன்றில்வீ சும்

தெங்கால் = தெங். =தென். =தெற்கு. கால் =காற்று. = தென்றல் காற்று

எழுதியவர் : பழனி ராஜன் (7-Jan-23, 1:17 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 316

மேலே