கற்பனையில் கவிதை அவள் நிஜமானாள்
இப்படித்தான் என்னவள் இருந்திட வேண்டும்
என்று கற்பனையால் அந்த அவளுக்கு
மனதில் வடிவ மைத்தேன் பின்னே
சொல்லின் கோர்வையால் அந்த அழகிக்கு
கவிதை ஒன்று எழுதி முடித்தேன்
என்ன விந்தை என்முன்னே அவள்
உண்மை ரூபவாதியாய் வந்து நிக்கின்றாளே
எழுதும் கவிதைக்கு இத்தனை ஆற்றலா
என்று எண்ணி மலைத்து நின்றேன்