494 பூங்கணைக் கஞ்சாள் பொன்கணைக் கஞ்சுவள் – கணிகையரியல்பு 21

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

பணயமே திரணமன்பு பெரிதென்ற பாவைபொருள்
..பறித்த பின்னர்
அணையேனென் றாளனங்க னுனக்கிலையோ வென்றேமவ்
..வறிவி லான்பூங்
கணைகளையே விடுத்தானா னஞ்சுவனோ காணுமெனுங்
..கதிரங் கொண்டென்
இணைமுலைமேற் றெறித்திடின்வெல் வானென்றாள் இவள்மனம்வல்
..இரும்போ அம்மா. 21

– கணிகையரியல்பு, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

செல்வமிக்க காலத்தில் பொதுமகள் `பொருள் ஒருதுரும்பு உங்கள் அன்பே பெரிது என்று கூறி நம் பொருளெல்லாம் பறித்தாள்.

பின்பு பொருளில்லாக் காலத்துக், கிட்டவும் வாரேன்; எட்டியும் பாரேன், என்றாள்.

உனக்குக் காமன் இல்லையோ என்று வினவினேன். அவள் `அறியாமை மிக்க கருவேள் பூங்கணைகளை என்மேல் விடுத்தான். அவற்றிற்கு யான் அஞ்சேன். பொருள் என்று சொல்லப்படும் பண அம்புகொண்டு என் மார்பின்மேல் வீசினால், வெல்வான், என்றாள். இவளுடைய உள்ளம் வலிமை மிக்க இரும்போ.

பணயம் - பொதுமகளுக்குக் கொடுக்கப்படும் பொருள்; திரணம் - துரும்பு.
அனங்கன் - காமன். காணம் - பொருள்; பணம், கதிரம் - அம்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jan-23, 5:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

சிறந்த கட்டுரைகள்

மேலே