அறிவாளிகட்கே உண்மைப்பொருள் உணர்த்தலாகும் – அறநெறிச்சாரம் 216

நேரிசை வெண்பா

அருவினையும் ஆற்றுள் வருபயனும் ஆக்கும்
இருவினையும் நின்ற* விளைவும் - திரிவின்றிக்
கண்டுணர்ந்தார்க்(கு) அல்லது காட்டதரும் நாட்டதரும்
கொண்டுரைப்பான் நிற்றல் குதர் 216

- அறநெறிச்சாரம்

*இருவினையுநின்று.

பொருளுரை:

துறவையும் அத் துறவின்கண் எய்தும் பயனையும், உலகோர் செய்யும் நல்வினை தீவினைகளையும் அவற்றால் எய்த நின்ற இன்ப துன்பங்களையும் உள்ளவாறே ஆராய்ந்து அறிய விரும்புவோர்க்கன்றி உலக நெறியையும், வீட்டு நெறியையும் உட்கொண்டு சொல்லத் தொடங்குதல் வீணேயாகும்.

குறிப்பு:

அதர் - வழி; நெறி. உலகப்போக்கு, பல பெருந் துன்பங்கள் மலிந்து நிற்றலின்? காட்டதர்? எனப்பட்டது.

வீட்டு நெறி; காரண காரியங்களாற் கூறி நாட்டிச் செய்கின்றமையின்? நாட்டதர்? எனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jan-23, 9:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே