சுபகிருது ஆண்டின் பொங்கல் வாழ்த்து
மண்ணில் பிறந்த எல்லா உயிரும்
உண்ண உணவை தேடிய நிலையில்
கண்ணில் பட்டவை எதையும் புசித்து
உணவாய் மாற்றி வாழ்ந்த நிலையிலே
மண்ணைக் கீறியே நெல்மணி விதைத்து
பெண்ணை பொன்னி பரணி வைகையென
எண்ணிலா நதிகளின் நீரால் விளைந்த
புண்ணிய உணவால் ஞாலம் செழிக்கவே
கீரைகள் பழங்கள் காய்கள் கிழங்கென
ஊருள் உள்ள மக்கள் பலரையும்
கார்முகில் போலவே பொழிந்து காக்கும்
பாருள் பிறந்த ஆதிக் கடவுளே
ஓய்விலா உழைப்பை நாளும் செய்யும்
தாயெனும் நிலையில் இருக்கும் உழவரை
பாயிரம் பாடியே மனதால் வாழ்த்தியே
ஆயிரம் ஆயிரமாய் வாழ்த்துகள் எழுதியே.
----- நன்னாடன்.