அமெரிக்காவில் பொங்கல் பானை

கண்ணன்: ஹை கன்னி, பொங்கல் பாட்டை (பாட் என்றால் பானை) எப்போ ஏத்தணும்?

கன்னியப்பன்: ஹாய் கண்ணு, ஜிங்கிள் பாட்டை பாடிக்கினு, அப்படியே டான்ஸ் பண்ணிக்கினு, பொங்கல் பானையை ஏத்திவச்சிடு.

கண்ணன்: ஏத்தறது சரி கன்னி, எந்த டேட்ல எந்த டைமுக்கு ஏத்தணும்?

கன்னியப்பன்: ஹை டேக் இட் ஈஸி கண்ணு, நீ வாரத்துல ரெண்டு மூணு டைம்ஸ் டேட்டிங் பண்ணுற. நீ டேட்டிங் பண்ணாத டேட்டா பாத்து பாட்டை ஏத்திப்புடு.

கண்ணன்: ஒன்லி ஞாயத்துக்கிழமை மட்டும்தான் நான் டேட் பண்றது இல்ல.

கன்னியப்பன் : தென் நீ சண்டே அன்னிக்கே பானையை ஏத்தலாம்

கண்ணன்: ஹை கூல், நானும் அன்னிக்கி சர்ச் போறதில்ல. நானும் அன்னிக்கே பொங்கல் பாட்டை ஏத்திடறேன்.

கன்னியப்பன்: ஓ மை காட், நீ எப்போ கிறிஸ்டியனா மாறின?

கண்ணன்: நோ நோ நோ கன்னி, நான் இப்பவும் ஹிந்துதான். ஐ மீன், ஐ அம் அன் ஹிண்டு. என் காதலி ஒருத்தி ஞாயித்துக்கிழமைல சர்ச் போனா என்னையும் வரச்சொல்லுவா. அதான் கன்னி, ஐ செட், நான் சர்ச் போறதில்லன்னு. கூல் கன்னி!

கன்னியப்பன்: உனுக்கு சோ பார் மேரேஜ் ஆவலை. பின்னே உனுக்கு எதுக்கு பொங்கல் பாட் வைக்கணும்? நானு பேமிலி மேன். நாங்க பொங்கல் செலிபிரெட் பண்ணுறோம். இப் யு வாண்ட் , நீயும் பொங்கல் டே , எங்க ஊட்டாண்ட வந்து சாப்பிட்டுப் போகலாம்.

கண்ணன்: ஆமாம் கன்னி, உன் ஒய்ப்பு (wife ) அமாண்டா உகாண்டா உமன்தானே? ஹொவ் ஹொவ் , எப்படி அவ பொங்கல் பண்ணுவாங்க?

கன்னியப்பன்: ஹை கம் ஆன், கிண்டல் வேணாம், நான் தான் பொங்கல் பாட்டை வைக்கப்போறேன். அமாண்டா அந்த நேரத்தில் பச்சை மொளகாய் போண்டா போடுவா.

கண்ணன்: அதுக்கு வேண்டிய இங்கிரெட்டியன்ட்ஸ் (சாமான்கள்) உன் ஹவுஸ்ல இருக்கா?

கன்னியப்பன்: ஐ ஹவ் ஜாகரி, அதான் இந்த வெல்லம், ரைஸும் கீது, ட்ரய் பிரூட்ஸ் கொஞ்சம் இருக்கு. பால் பாக்கெட் எப்பவும் பிரிட்ஜுல இருக்கும். ஜஸ்ட் ரெண்டு பாக்கெட் பாலை குக்கர்ல ஊத்திட்டு, வெல்லத்தை நல்லா ஸ்மாஷ் பண்ணி மிஃஸ் பண்ணிட்டு, அதுல ட்ரய் பிரூய்ட்ஸ் ஆட் பண்ணிட்டு, ஜஸ்ட் புட் இட் ஆன் தி ஸ்டோவ். பைவ் சிக்ஸ் விசில் பிளோ ஆச்சுன்னா நிறுத்திட்டு, அனாதர் பத்து மினிட்ஸ் அப்புறம் திறந்தா, டெலிசியஸ் பொங்கல்.

கண்ணன்: பொங்கல் பண்டிகையில் இந்தியாவில் எங்க வீட்டில் டூ டைப்ஸ் பொங்கல் பண்ணுவாங்க. ஒன் இஸ் சக்கரை பொங்கல் இன்னொன்னு வெண்பொங்கல். நீ வெண்பொங்கல் வைப்பியா?

கன்னியப்பன்: நோ ப்ராபளம். அது செம்ம ஈஸிபா. கொஞ்சம் சக்கரை பொங்கலை எடுத்து அதுல கொஞ்சம் போண்டாவோட மாவைக்கலந்து, உப்பும் மிளகாய்ப்பொடியும் போட்டோம்னா இன்ஸ்டன்ட் வெண்பொங்கல் தயார். அமாண்டவிடம் க்ரீன் சில்லி போண்டா மாவில் கொஞ்சம் செப்பரேட்டா எடுத்துவைக்கச் சொல்றேன். இன் அட்டிஷன் நான் பயத்தம்பருப்பு அரை கிலோ பாயில் பண்ணி வச்சிடறேன். அதையும் இத்தோட ஒரு பத்து நிமிஷம் நல்லா மிஃஸ் பண்ணா இட் வில் டர்ன் அவுட் அஸ் அவுட்ஸ்டாண்டிங் பொங்கல்.

கண்ணன்: பாண்டாஸ்டிக் கன்னி, யு ஆர் வெரி ஸ்மார்ட். ஆமாம், பொங்கலுடன் மிஃஸ் பண்ணி சாப்பிட சட்னி சாம்பார் ஏதாச்சும் உண்டா?

கன்னியப்பன்: நான்தான் சட்டினி அமாண்டாதான் சாம்பார். ஜஸ்ட் ஈட் வாட்டவேர் ஐ கிவ் , கண்ணு. நீ வரசொல்ல நாலு வைன் பாட்டில் கொண்டா. அதுதான் பொங்கல் கூட ட்ரின்க் பண்ண செமித்தியா இருக்கும்.

கண்ணன்: கன்னி டியர், என் வீட்டுல நாலு என்ன ஆறு விஸ்கி பாட்டில்ஸ் இருக்கு. பட் நாட் ஈவென் ஒரு ட்ராப் வைனு. சோ, வைனும் நீதான் சப்ளாய் பண்ணனும். நான் வேணும்னா ஒரு பாக்கிட்டு பொட்டேட்டோ சிப்ஸ் வாங்கியாறேன். எனக்கு வெறும் சாம்பார் மட்டும் இருந்தாக்கூட போதும்பா கன்னி.

கன்னியப்பன்: கண்ணு நீ அன்னிக்கு சர்ச்சுக்கே போய்க்கோ. இன்னொருவாட்டி நான் பொங்கல் பண்ண சொல்ல , ஐ வில் இன்வைட் யு டியர். இப்போ கெட் லாஸ்ட்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Jan-23, 3:53 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 72

மேலே