இவள்சிரிப்பா இன்பக் கடலின் அழைப்பா

பவழயிதழ் பேழையில் வெண்முத்து மாலை
தவழுது செவ்விதழில் செந்தமிழ்த்தேன் சொட்டு
இவள்சிரிப்பா இன்பக் கடலின் அழைப்பா
துவளுமிடைப் பூங்கொடி யே
---அடி எதுகையுடன் ஒரு விகற்ப இன்னிசை வெண்பாவாய்
பொலியும் இக்கவிதையில் சீர் மோனையில் இணை மற்றும் முற்று மோனையும்
பொலிந்திடும் அழகை யாப்பு பயில்வோர் யாப்பெழிலுடன் ரசித்து மகிழ்க
விரும்பின் முயலுக
பவழயிதழ் பேழையில் வெண்முத்து மாலை
தவழுது செவ்விதழில் நற்தேன் --தவழும்
இவள்சிரிப்பா இன்பக் கடலின் அழைப்பா
துவளுமிடைப் பூங்கொடி யே
-----இப்பொழுது நேரிசை வெண்பாவாக