சிலையைக் காணோம் சீருடன் காண்கவே - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(மா மா விளம் விளம்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
அலையாய் அலையும் ஆயிரம் மக்களும்
விலையும் கொடுத்தே வாங்கிய சீட்டுடன்
மலைக்கும் கூட்டம் மைதான முட்புறம்
சிலையைக் காணோம் சீருடன் காண்கவே!
- வ.க.கன்னியப்பன்
குறிப்பு:
பெருவை பார்த்தசாரதி அவர்களின் பாடல் சீர்கள் நெறிப்படுத்திய பின்.