களித்து நாளும் போற்றுவமே - எழுசீர் ஆசிரிய விருத்தம்
எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா 4 / மா மா காய்)
(1, 5 சீர்களில் மோனை)
சிரிக்கு மில்லக் கிழத்தி யுந்தான்
..சிந்தை மகிழச் செய்வோமே
விருப்பம் மிக்க அவளுள் ளந்தான்
..வேண்டும் மகிழ்வைத் தருவோமே
உரிமை யுள்ள அவளுள் ளந்தா
..னுவகை கொள்ளச் செய்வோமே
கருது மவட்ட மெண்ணம் பலவுங்
..களித்து நாளும் போற்றுவமே!
– வ.க.கன்னியப்பன்