பொதிகைத் தமிழிற் பொதிந்த சொல்லெடுத்து - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(மா மா மா காய்)
(1, 3 சீர்களில் மோனை)

பொதிகைத் தமிழிற் பொதிந்த சொல்லெடுத்துப்
புதுமை நிலவிற் பொழியு மெழிலெடுத்துக்
கதியா யவைகள் காட்டுஞ் சுவையதனால்
நிதியாய்க் கவிதை நினைந்து பாடுவனே!

– வ.க.கன்னியப்பன்

மரபுக் கவிதைக்கு அழகு தருவது நல்ல கருத்தும், தகுந்த இலக்கண வழிமுறையும், சீர் ஒழுங்கும், தகுந்த மோனையும், எதுகையுமே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jan-23, 1:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே