பெண்ணின்குல மனத்தின்நெறிப் பெருமைக்குயில் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(கனி கனி கனி மா)

வண்ணந்தரு அழகின்னுரு வளமுங்கொளும் பெண்ணாள்
கண்ணின்மணி களிப்பில்திகழ் கனிவின்சுகம் அவளே!
திண்ணம்மனத் தெளிவின்செயல் தெரிந்தேசொலும் அழகி
பெண்ணின்குல மனத்தின்நெறிப் பெருமைக்குயில் அன்றோ!

– வ.க.கன்னியப்பன்

எ.காட்டு:

கலிவிருத்தம்
(கனி கனி கனி மா)

துன்பம்பய மிடிநோய்பகை சோரங்கொலை யெய்தா(து)
இன்பம்பொரு ளறன்யாவையு மியல்பாதலி னெய்தித்
தன்பைங்குடை நிழன்மன்பதை தரியார்முனை மதியா
வன்பன்றனை நிகர்வாழ்வுற வருநாள்களி லொருநாள் 1

- அருச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கம், வில்லி பாரதம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jan-23, 1:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே