கனவு

கனவு....
****

கண் மூடித் தூங்கையில்
கண் முன்னே விரியும்
மெய்யாய் நம்பச் செய்யும்
எண்ணச் சிதறல்கள்தான்
கனவு....

எண்ணச் சிதைவுகளால்
அஸ்த்திவாரம் இல்லாது
கட்டப்படும் அலங்கார
அரண்மனைதான்
கனவு...

வண்ண வண்ண
வண்ணத்துப் பூச்சிகள் பறக்க
வண்ண வண்ண
பூக்கள் மலர்ந்த
பூங்காவனமே
கனவு...

சிலசமயம்
பேய்க்கூட்டத்தோடு
பாம்புகள் நெளிய
காளியும் கோரப்பல் காட்டி
பயத்தை விதைக்கும்
படபடப்பே
கனவு....

சுள்ளென சூரியக்கதிர்கள்
சுட்டவுடன் தன்னையே
சுருட்டிக்கொள்ளும்
எலும்புகளற்ற அற்ப புழுவே
கனவு....

அவரவர் வாழ்க்கையில்
நிறைவேறா ஆசைகளின்
நிறைவேற முடியாத
ஏக்கங்களின் கூட்டே
கனவு...

கனவுகளில் எல்லாம்
சாத்தியமே...
நனவுகளில் எல்லாம்
நாடகமே...
கனவுக்கும் நனவுக்கும்
இடையே நடக்கும்
எதார்த்தமே வாழ்க்கை.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (20-Jan-23, 8:13 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : kanavu
பார்வை : 131

மேலே