கட்டான என்தோளில் சாய்ந்துவரும் எழிலே
கட்டளையிட கடைவிழிகள் காதல் மொழிபேச நீலவானின்
வட்டநிலா அங்குமிங்கும் உலவிவர நிலவும் மெல்லியகாற்றும்
திட்டமிட்டு கைகோர்த்து நடந்திடும் மாலை வேளைதன்னில்
கட்டான என்தோளில் சாய்ந்துவரும் நீலக்குழல் நிலவே
கட்டளையிட கடைவிழிகள் காதல் பேச
வட்டநிலா அங்குமிங்கும் உலவிவர நிலவுகாற்று
திட்டமிட்டு கைகோர்த்து நடந்திடும் மாலையில்
கட்டான என்தோளில் சாய்ந்துவரும் எழிலே
கட்டளைகள் இட்டிட கண்ணிரண்டும் காதலில்
வட்டநிலா வானில்மென் தென்றல்காற் றோடுசேர்ந்து
திட்டமிட்டு கைகோர்த்து சென்றிடும் மாலையில்நீ
கட்டான என்தோள்மீ தில்
மூன்று வடிவில் தோளில்----