அமாவசை அன்று பௌர்ணமி
கண்ணில் இரக்கம் தாயெனும் எனக்க றிந்திடுவாய்
பெண்ணில் பெரியள் அமாவசை அன்றுதான் பக்தனுக்கு
விண்ணிலே தவழ விட்டேன் வெண்பௌர்ணமி யாய்ஒளிர
வெண்ணிலா கவி புனைவோன் தமிழ்க்கவின் சாரலனே
---இதை கலித்துறை என்று அடையாளம் காட்டுகிறது அவலோகிதம் எனும் யாப்பு மென்பொருள்
கட்டளை கலித்துறையில் முற்றிலும் பொருந்த வில்லை
விரும்புவோர் முயலலாம் க க து கை கூடலாம்