அழகு நிலவு அவள் முகம்
கலிவிருத்தம்
வானில் நீந்திடும் வால்தலை யற்றமுழுத்
தோனி பால்நில வோடந்தான் வட்டமடா
வேனிர் தண்ணென தேடிடும் நிலவடா
போனிற் வான்நில வுத்தொட ஆனதென்னே
வட்ட நிலாவா வளதுமுகம் வர்ணிபோர்
பட்டதை சொல்லுவர் பாவலர் -- இட்டமாய்
நட்டமேது கேட்டுருகு நாயகவாட் டம்போக்கும்
பிட்டுவைத்த விஞ்சான மின்று
....