காதலால் ஒன்றியே திளைக்க வைத்தனள் - கலிவிருத்தம் 2

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)

என்னவள் என்னையே இடித்துச் சென்றிட
என்மனம் வாட்டமாய் எண்ணி வாடிடத்
தென்றலாய் வந்தவள் தெவிட்டுங் காதலால்
ஒன்றியே என்றனைத் திளைக்க வைத்தனள்!

- வ.க.கன்னியப்பன்

இடித்து – ஊடலால் கோபித்து

எ.காட்டு:

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)

அங்கியா லங்கியை வெதுப்பி வெம்மையைப்
பொங்கிய வாயுவாற் போக்கி மெய்ச்சிரந்
தங்கிய வமுதினாற் றண்ணெ னும்படி
இங்கிதத் தொடுக்கின னிதயந் தன்னையே! 44

- அருச்சுனன் தவநிலைச் சருக்கம், வில்லி பாரதம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-23, 6:54 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே