சொற்று வல்லை துயருழந் தேகினான் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும். விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

சுரர்கள் யாருந் தொலைந்திட வென்றுதான்
ஒருவ னாகி உமைமகன் மேவுழி
அருளின் நாரதன் அச்செயல் கண்டுவான்
குருவை யெய்திப் புகுந்தன கூறினான். 61

நற்ற வம்புரி நாரதன் கூற்றினை
அற்ற மில்லுணர் அந்தணன் கேட்டெழீஇ
இற்ற தேகொல் இமையவர் வாழ்வெனாச்
சொற்று வல்லை துயருழந் தேகினான். 62

- திருவிளையாட்டுப் படலம், கந்த புராணம்

கலிவிருத்தத்தில் இது ஒரு வகை. எழுத்தெண்ணிப் பாட வேண்டும்.

கலிவிருத்தம் எழுத விரும்புபவர்கள் மேலே கொடுத்துள்ள குறிப்புகளை வாசித்து நன்கு புரிந்தபின் எழுத முயற்சிக்கலாம்.

விருப்பப்படி தவறாக எழுதினால் நகைப்பிற்கு ஆளாக ஏதுவுண்டு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-23, 10:34 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே