தேடும் விழிகள் தீம்பொழிலில் எனைத்தேடுது - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(தேமா புளிமா காய் கனி)
பாடும் பறவை விடியலுக்குக் காத்திருக்குது;
ஆடும் மலர்கள் தென்றலுக்குத் தவமிருக்குது!
ஓடும் அலைகள் உன்னிருப்பைப் பார்த்திருக்குது;
தேடும் விழிகள் தீம்பொழிலில் எனைத்தேடுது!
– வ.க.கன்னியப்பன்