572 சிற்றுயிரும் ஓம்பலிறை சிறந்த திருத்தொண்டு - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 30

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

தன்பணி செயற்கு வாய்ந்த
..மக்கள்தம் பணியி யற்ற
மின்பணி சுடர்கள் பூத
..விரிவெலாம் விமல னீந்தான்
நன்பணி யவைக ணாளும்
..நம்பணி யாற்று மையன்
நன்பணி யியற்று கில்லேம்
..நன்பணி யனைய நெஞ்சே. 30

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மனமே! தன் திருத்தொண்டாகிய சிற்றுயிர் முதல் மக்கள் ஈறாகவுள்ள எல்லா உயிர்களையும் எல்லா வகையாலும் இடையறாது பேணுதற்கு வாய்ப்புள்ள மக்கட் பிறப்பினை நல்கினன்.

அம்மக்கட்கு வேண்டும் துணைபுரிய விளக்கமிக்க ஞாயிறு திங்கள் முதலிய கோள்களும், ஐம்பெரும் பூதங்களும் அமைத்து அருளினவன் அழுக்ககன்ற கடவுள்.

அவன் திருப்பணியைச் செய்யாத நாம் நஞ்சுடைய நல்ல பாம்பை ஒப்போம்.

பணி - தொண்டு. பணி - பாம்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-23, 7:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே