497 இருமனத்தால் பிணமாதல் இயையும் பொதுமகட்கே – கணிகையரியல்பு 24

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

கலவிசெய்த மாதென்னை விலைகேட்டாள் உடனொக்கக்
..கலந்து காம
நலமுண்ட வுனக்குவிலை யேதென்றேன் சவமனைய
..நான்சு கிக்க
இலையென்றாள் பொய்யென்றேன் வள்ளுவர்கூ றியகுறளாம்
..இனிய நூலில்
விலைமாதைச் சேர்த’ல்’பிணந் தழுவியதை யொக்குமென்றார்
..வீணோ வென்றாள். 24

- கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

என்னுடன் இன்புற்ற பொதுமகள் அவ் இன்ப விலையாம் பொருள் ஈக என்றாள்.

யான், `நீயும் என்னுடன் இன்புறவில்லையோ? என்றேன்.

`இல்லை யென்றாள். ஏன் என்றேன். `யான் பிணமாம் நிலையொத்து மனம் பொருந்தாதிருந்தேன். அதனால் எனக்கு இன்பமில்லை.

இவ்வுண்மை, திருவள்ளுவ நாயனார் பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையிலேதில் பிணந்தழீஇ யற்று என்றருளிய தமிழ் மறையாலுணர்ந்து கொள்க, என்றனள்.

காம நலம்-இன்பம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-23, 7:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

சிறந்த கட்டுரைகள்

மேலே