சிவன்கண்ணே செய்ம்மின்கள் சிந்தை - அறநெறிச்சாரம் 219

நேரிசை வெண்பா

அவன்கொல் இவன்கொலென்(று) ஐயப் படாதே
சிவன்கண்ணே செய்ம்மின்கள் சிந்தை - சிவன்றானும்
நின்றுகால் சீக்கும் நிழறிகழும் பிண்டிக்கீழ்
வென்றிச்சீர் முக்குடையான் வேந்து 219

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

இறைவனாவான் அவனோ இவனோ என்று ஐயமுறாமல் சிவன்பாலே சிந்தையை நிறுத்துங்கள், அச்சிவனும் எப்பொழுதும் அடைந்தாரது இடரைத் துடைக்கும்; அருள்மிக்க அசோகின்கீழ் எழுந்தருளியிருக்கும் வெற்றியையுடைய சிறந்த மூன்று குடைகளுடையவனாகிய அருகனே யாவான்.

குறிப்பு: நின்று கால் சீக்கும் நிழல் திகழும் எண்பதைப் பிண்டிக்கு அடையாக்கி, எப்பொழுதும் அடைந்தாரது வெம்மையைத் துடைக்கும் குளிர்ச்சி மிக்க என்று பொருள் கூறினும் பொருந்தும்.

சிந்தையை நிறுத்துதலாவது இடைவிடாது சிந்தித்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jan-23, 7:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே