திருசக்கரை வாசனார்க்கு இன்னொரு பயிற்சி - உங்களால் முடியும்
திரு.சக்கரை வாசனார்க்கு இன்னொரு பயிற்சி!
திரு.பழனிராசர் அவர்களும் முயற்சிக்கலாம்.
முடிந்தால், கவின் சாரலரும் முயற்சிக்கலாம்.
இப்பாடல் ஒரு கலிவிருத்தம் ஆகும்.
இதன் இலக்கணத்தையும் சொல்கிறேன்.
கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
1) முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
2) விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
3) 2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்;
விளச்சீர் வரும் இடத்தில் மாங்காய்ச்சீர் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் மாச்சீர் வந்தால் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; *மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
முன்னர் மாலை முடி அணி சுந்தரத்
தென்னர் ஏற்றின் திருமுகம் கண்டு தாழ்ந்து
அன்ன வாசகம் உள் கொண்டு அயல் புல
மன்னர் மாதவர் யாரும் வருவர் ஆல். 13
- உக்கிர பாண்டியனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம், மதுரைக் காண்டம், திருவிளையாடற் புராணம்