மாயாவதி மத்தியமாவதி
மாயாவதி: நானும் ஐந்து ஆண்டுகளாக நமது மாதர் சங்கத்தலைவியாக தொடர்ந்து போட்டியிட்டு வருகிறேன். ஆனால் ஒவ்வொரு தடவையும் நான் தோற்ற வண்ணமே இருக்கிறேன், ஏன்னு சொல்லடி மத்தியமாவதி?
மத்தியமாவதி: அது உன்மேல ஒன்னும் தப்பு இல்லை மாயாவதி. உன் பெயரில்தான் பிரச்சினை. வடக்கில் மட்டும் இல்லை தெற்கிலும் மாயாவதி என்ற பேரை கேட்டாலே பலரும் பயப்படுகிறார்கள்.
மாயாவதி: நான் அடுத்தமுறை சங்கத்தலைவி தேர்தலில் நிற்கும்போது மாயாவதி பெயரை மாற்றிக் 'காலாவதி' என்று வைத்துவிடுகிறேன்.
மத்தியமாவதி: ???
&&&
மத்தியமாவதி: மாயாவதி, நம் மாதர் சங்கத்தின் எதிரிலேயே மதர் சங்கம் என்று ஒரு அமைப்பு வந்திருக்கிறதே, என்ன அது?
மாயாவதி: உனக்கு அந்த விஷயம் தெரியாதா, நமது மாதர் சங்கத்தில் உள்ள பெண்களின் தாயார்கள் சேர்ந்துதான் இந்த அமைப்பை துவங்கியிருக்கிறார்கள். உன்னுடைய அம்மா கலாவதிதான் இந்த சங்கத்தின் தலைவி.
மத்தியமாவதி: இன்னிக்கு காலையில்கூட என் அம்மா “ நீ இன்னிக்கி என்ன சமையல் செய்தாய், உன் வீட்டு வேலைக்காரி மட்டம் போடாமல் வேளைக்கு வருகிறாளா , உன் வீட்டுத்தெருவில் நாய்கள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது” போன்ற தம்பிடி பிரயோசனம் இல்லாத விஷயங்களை கேட்டுத்துளைத்தவள் இந்த முக்கியமான விஷயத்தைப்பற்றி மூச்சு விடவில்லையே?
மாயாவதி: ???
&&&
மத்தியமாவதி: நமக்கு போட்டியாக எதிரில் ஆரம்பித்திருக்கும் மதர் சங்கத்தில் உறுப்பினராக அடிப்படைத்தேவை என்ன தெரியுமா?
மாயாவதி: தெரியாது. உனக்குத் தெரியுமா?
மத்தியமாவதி: நேற்றுதான் நான் அம்மாவிடம் பேசினேன். அவர்கள் சங்கத்தில் உறுப்பினராக அடிப்படைத்தேவை முடி கருப்பாக இருக்கவேண்டுமாம்.
மாயாவதி: அதெப்படி முடியும்? ஐம்பத்தைத் தாண்டிவிட்டால் பல பெண்களுக்கும் முடி நரைத்துவிடுமே?
மத்தியமாவதி: அப்படி நரைத்தால் தலைக்குக் கருப்பு வர்ணம் போட்டுக்கொள்ளவேண்டும். அந்த வர்ணப்பொடியையும் மதர் சங்கம் மூலமாகத்தான் வாங்கவேண்டுமாம்.
மாயாவதி: கருப்பு வர்ணப்பொடி விலை என்ன?
மத்தியமாவதி: வாரத்திற்கு இருமுறை போடும் கருப்பு வர்ணப்பொடி விலை 500 ரூபாய்.
மாயாவதி: விலை ரொம்ப அநியாயமாக இருக்குடி. ஒருத்தி மாசாமாசம் தலைக்கு டை அடிக்க 2000 ரூபாய் செலவு பண்ணுவாங்களா?
மத்தியமாவதி: அதைப்பத்தி நாம் எதுக்குடி கவலை படணும். அது மதர் சங்கப் பாடு.
மாயாவதி: உனக்கு இருபது வயசிலேயே முடி நரைச்சிருச்சி. ஆனால் நீ கல்யாணத்திற்குப்பிறகு, உன் புருஷன் பேச்சைகேட்டு டை போடுவதே இல்லை. இப்போ பார்த்தா நீதான் மதர் சங்கத்தலைவி மாதிரி இருக்கே.
மத்தியமாவதி: ???