பைத்தியமும் முட்டாள் கிளார்க்கும்
நீடா மங்களத்தி லிருந்து சென்னை DGP க்கு ஒரு நபர் தன்னுடய பெயரை குறிக்காது , தன்னுடைய குறைககளை மட்டும் எழுதி நடவடிக்கையை எடுக்கும்படி மனுவை அனுப்பியிருந்தார்.
DGP அந்த மனுவ. DIG க்கு நடவடிக்கைக்கு அனுப்பி வைத்தார்.
DIG யோ அந்த மனுவை தஞ்சாவூர் S.P. க்கு அனுப்பி வைத்தார்
S.P. அந்த மனுவை நீடா மங்களம் ஆய்வாளர்களுக்கு தக்க நடவடிக்கையை எடுத்து ஒருவாரத்தில் பதில் அனுப்பும் படி
உத்தவிட்டு இருந்தார். அந்த மனுவில் மனுதாரர் பெயரோ
அல்லது எதிர் மனுதாரர் பெயரோ குறிக்கப் பட்டிருக்க வில்லை
மனுவில் எழுதி யிருந்ததை கீழேேப் பாருங்கள்.
"" என்னுடைய வீட்டிலிருந்து சுடுகாடு தொலைவில் இருக்கிறது. அது எனக்கு மிகுந்த தொல்லையாக இருக்கிறது. என்னுடைய வீட்டிலிருந்து சுடுகாடு மிகவும் தொலைவில் இருக்கிறது. அது எனக்கு மிகுந்த தொல்லையாக இருக்கிறது...என்னுடைய வீட்டிலிருந்து சுடுகாடு மிக மிகத் தொலைவில் இருக்கிறது. அது எனக்கு மிகுந்த தொல்லையாக இருக்கிறது. சுடுகாடு தொலைவில் இருக்கிறது. மிகத்தொலைவில் இருக்கிறது. உடனடியாக கவனிக்கவும். மிகவும் தொல்லையாக இருக்கிறது. """
இந்த மனுவை பிரித்த காவல் ஆய்வாளர் திருப்பித். திருப்பிப்
பார்க்கிறார் பெயரோ தெருவின் பெயரோ எந்த பேட்டை என்றோ எந்த சுடுகாடு என்றோ எதையும் குறிக்க வில்லை. இதற்கு என்ன பதில் எழுத முடியும். தலையைப் பிய்த் துக்கொண்டார்.
உடனே அந்த மனுவிற்கு இப்படி கீழ்க்கண்டவாறு பதில் எழுதி DHP க்கு அனுப்பி வைத்தார்..
இந்த மனுவை அனுப்பியவர் தன்னுடைய பெயரையும் விலாசத்தையும் எழுதவில்லை . ஆதலால் மனுதாரரை கண்டுபிடிக்க இயலவில்லை. மேலும் மனுதாரர் சுடுகாடு தன்னுடைய வீட்டிற்கு வெகு தொலைவில் இருப்பதாகக்
குறிப்பிட்டு நடவடிக்கைகள் எடுக்க கோரியுள்ளார். எந்த கிராமம் அல்லது குக் கிராமம் என்பது போன்ற விவரமும் குறிக்கவில்லை.
ஆகவே இந்த மனுவை யாரோ புத்தி சுவாதீனமற்ற ஒருவர் எழுதி இருப்பது போல தெரிகின்றது . ஆகையாl இந்த மனுவின் மீது நடவடிக்கை தேவையில்லை என்று ஆய்வாளர் எழுதி மனுவைத்
திருப்பி அனுப்பிவிட்டார்.
DGP அலுவலம் திருப்பி அனுப்பப்பட்ட அந்த மனுவை அங்கேயே முடித்து விடாமல் அங்கிருந்த கிளார்க்குகள் அந்த மனுதாரரின் வாக்குமூலத்தை வாங்கி இணைத்து அனுப்பவும் என்று திருப்பிவிட்டார்கள். அந்த மனு மீண்டும் DIG, S.P., DSP வழியாக ஆய்வாளருக்கே வந்து சேர்ந்தது.
மீண்டும் ஆய்வாளர் அந்த மனுவில் பெற்று இந்த மனுதாரரின் பெயரோ தகப்பனார் பெயரோ உறவினர் பெயரோ விலாசமோ இல்லை இது அனாமதேய மனு. ஆகையால் தயவு செய்து DGP
அலுவலகத்தில் முடிவு செய்து கொள்ளவும் என்று திருப்பி அனுப்பிவிட்டார்.
அந்து மனு DGP அலுவலகம் சேர்ந்து அதைப்பார்த்த கிளார்க்குகள்
அதே மனுவினைத் திருப்பி விட்டு அந்த மாதிரி நபர் யாரும் ஊரில்
இல்லை என்று சர்டிபிகேட் வாங்கி ஆதாரத்துடன் ஒரு வாரத்திக் அனுப்பி வைக்கும்ப்படி இருந்ததது
இப்படியாக மீண்டும் அந்த மனு நீடாமங்களம் ஆய்வாளர்களுக்கு வந்தது. இல்லாத ஒருவனுக்கு இல்லை என்று சர்டிபிகேட் வாங்கச்சொல்லும் DGP ஆபிஸ் கிளார்க்குகளின் என்ன செய்வது
என்று ஆய்வாளர். அந்த மனுவை அப்படியேக் கிடப்பில் போடடு விட்டார். 1 ஆம் தேதி யானதும் DGP அலுவலகத்திலிருந்து அந்த
மனு இன்னும் பதில் அனுப்பவில்லை என்று நினைவூட்டும் கடிதம் அனுப்பி யிருந்தார்கள். அதற்கு ஆய்வாளர் மனுவை கோப்பில் கிடப்பில் போட்டுவிட்டு தனியாக ஒருத் தாளில். இந்த மனுவின் மீது தக்க நடவடிக்கை எடுத்து முடிக்கப் பட்டுவிட்டது. மேற்கொண்டு
நடவடிக்கை தேவையில்லை என்பதால் DGP அலுவகமும் அப்படியே
ROUND UP செய்து கொள்ளவும் என்று எழுதினார். பிறகு யாரும் அந்த மனுவை கேட்கவில்லை.