வாழ்க்கை


வாழ்க்கை வெறுத்துப்போய்த்

தற்கொலை செய்து கொள்ளலாமெனச் சாலையோரம் நின்றான்.


மூன்றாவதாக வரும் பெரிய லாரியில் விழலாமெனப் பயத்தோடு ஓரடி முன்னே எடுத்து வைக்கையில் கால்களை நக்கியபடி வாலாட்டிக் கொண்டிருந்தது ஒரு நாய்க்குட்டி

என்றோ ஒருநாள் போட்ட பிஸ்கட்டுக்காக..




எழுதியவர் : திசை சங்கர் (27-Jan-23, 8:57 am)
சேர்த்தது : THISAI SANKAR
Tanglish : vaazhkkai
பார்வை : 79

மேலே