சிலிர்க்கும் பூஞ்சிட்டு

சில்லென காற்று குளிரும்
சொல்லென உன் முகம் பேசும்
மிளிரென உன் புன்னகை கூசும்
தளிரென உன் கை தாங்கும்
நறும்பூவென உன் உதடுகள் மலரும்
கலகலவென உன் சிரிப்பொலி கேட்கும்
படபடவென உன் இறகுகள் அடிக்கும்

எழுதியவர் : சு.சிவசங்கரி (29-Jan-23, 7:21 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 62

மேலே