தீப ஒளி திருநாள்

சிரிக்க சிரிக்க சிரிப்பு வரும் மத்தாப்பு !
பொறி பறக்க பறக்க பறந்து வரும் கை பாத்து !
வானத்துல நட்சத்திரம் பூப்பூத்து !
கையில விழுந்ததென்ன நீ காட்டு !
கன்னக்குழி சிவக்க சிவக்க காரப்புட்டு !
கையிக்குழி சிவக்க சிவக்க பலகாரம் தொட்டு !
இடிச்சு புழிஞ்ச இடியாப்பம் !
கடிச்சு முடிக்க முறுக்கு நெய்யாட்டம் !
இத நாங்க சாப்பிடத்தான் கொஞ்சம் நாளாகும் !
நமக்கு தீப ஒளி திருநாளாம் !
எங்கும் கரவொலி மத்தளமாம் !

எழுதியவர் : சு.சிவசங்கரி (29-Jan-23, 9:08 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 104

மேலே