இனிதே வாழ கற்றுக் கொடு

"கோடி கோடி வணக்கங்கள் இறைவா !
சுகமாய் வாழ வழி விடு ;
இனிதே வாழ கற்றுக் கொடு ;
காலனை எதிர்கொள்ள காற்றாய் பறந்திட,
காலம் உன் கையில் என்றே மாற்றிடு ;
கடமையை உரமேற்றி விருட்சமாய் ஊன்றிட
எனக்கான வலியை உன்னுள் தாங்கிடு ;
வறுமையே வெறுமையாய், துன்பமே சுகந்தமாய்
வாழ்வே இன்பமாய் போற்றிடவும்
என்னுள் உன்னைக் காட்டிடு;"

எழுதியவர் : சு.சிவசங்கரி (1-Feb-23, 7:48 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 63

மேலே