நைடாவா - நிடவா

என்னங்க நம்ம திருமணம் ஆகி பத்து வருசம் கழிச்சு அழகான பெண் குழந்தைய் பெத்திருக்கேன். அதுக்கு உலகத் தமிழர் யாரும் தன் பிள்ளைகளுக்கு வைக்காத இந்திப் பேரு வைக்கணுங்க.
@@@@@@@
ஏன் தமிழ்ப் பேரா வைக்கலாமே.
@@@@@@
இல்லங்க. குறிப்பாக நம்ம தமிழ்த் தாய்மார்கள்ல 99.9% பேரு பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேரை வைக்கிறத விரும்பரதில்லங்க. நாம மட்டும் நம்ம பொண்ணுத் தமிழ்ப் பேரை வச்சா ரொம்ப கேவலமாகப் பேசுவாங்க.
@@@@@@@@
அப்பிடியா சொல்லற? சரி நீயே நீ பெத்த மகளுக்கு உனக்கும் பிடிச்ச பேரைச் சொல்லு. அதையே வச்சிருலாம். எங் கண்ணில் பட்ட பேரு Nida-ங்க. அது 'நிடா'வா, 'நைடா'வானு தெரியலீங்க.
@@@@@#
அர்த்தம்?
@@@@@##
அர்த்தம்?
@@@@@@
பேரோட பொருள் தெரிஞ்சு பேரு வைக்கிறதெல்லாம் தமிழ்ச் சமுதாயம் மறந்து போச்சுங்க. இந்திக்காரங்க நம்ம தமிழ்ப் பற்றையும் தமிழுர்ணவையும் பார்த்துக் கேவலமா நினைக்கிற நிலையிலதான் தமிழர்களான நாம் இருக்கிறோம். பத்தோட பதிணொண்ணா வாழறதுதாங்க தற்கால வாழ்க்கை.
@@@@@@
சரி சொல்லற பேரையே வச்சிட்டு நம்ம குழந்தையை "நைடா"ரே கூப்பிடலாம்; கொஞ்சலாம்‌.
@@@@###
நைடாச் செல்லம்.
@@@#@####@@@@@@@@@@@@@@@@###
Nida = Call. Indian origin. Feminine நமே
அழை, அழைத்தல், அழைப்பு, கூப்பிடு

எழுதியவர் : மலர் (2-Feb-23, 1:27 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 39

மேலே