612 தந்தை தாயின் உடன்பிறப்புச் சார்மக்கள் பேணலறம் - உடன் பிறந்தார் இயல்பு 5

கலிவிருத்தம்
(கூவிளங்காய் கூவிளம் காய் விளம்)

தந்தையோடு தாயொடு தாம்பிறந்த சோதரர்
மைந்தரானுந் தந்தைகொண் மறுமனை வயிற்றிடை
வந்தபேர்க ளாயினு மற்றுளோர்க ளாயினு
முந்துகாத லோடுநட் புவந்துவாழ்தல் நன்றரோ. 5

- உடன் பிறந்தார் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

தந்தையின் கூடப்பிறந்தவர்கள், தாயுடன் பிறந்தவர்கள், அவர்தம் பிள்ளைகள், தந்தை மறுமணம் புரிந்துகொண்ட மாற்றாந்தாயின் பிள்ளைகள், ஏனையோர் யாவராயினும் எல்லாருடனும் ஒரு தாய் வயிற்றுப் பிறந்தார்போல் பேரன்பு கொண்டு நண்பும் மகிழ்வும் நீங்காது ஒற்றுமையுடன் வாழ்வதே நன்மையாகும்.

மறுமனை - பின்மணந்த மனைவி, மாற்றாந்தாய். காதல் - பேரன்பு. .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Feb-23, 2:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே