உச்சுவாலு
மணமாகி பத்தாண்டுகள் சென்றபின்பு
அழகாகப் பிறந்தது ஒரு ஆண் குழந்தை
உலகத் தமிழர் யாரும் தம் பிள்ளைக்குச்
சூட்டாத பெயரை வைத்திடத் தேடினோம்.
கிடைத்த பெயர் உஜ்ஜுவால், உசஜ்ஜுவால்
சொல்லப் சொல்ல இனிக்கும் பெயர்
இப்பெயரைக் கேட்பவரும் சுவீட்டு நேம்
என்றுகூறக் கேட்டுப் பெருமிதம் காதில்!
கொள்ளும் பாட்டிக்கு மட்டும் ஏனோ
இந்தி சமஸ்கிருதப் பெயர்களை யெல்லாம்
உச்சரிக்க முடியாமல் பாட்டியின் நாவில் உஜ்ஜுவால் 'உச்சுவாலு' ஆகிப் போனதே?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Ujjwal = Bright, Clear, Splendorous. Sanskrit masculine name.