பல கேள்விக்கு ஒரு பதில்

என் நண்பர் ஒருவர் என்னை எப்போதும் ஒரு கேள்வி கேட்பார். அந்த கேள்விக்கான பதிலை அவரிடம் கூறியபோது இது நம்மில் பலருக்கும் சொந்தமான பதில் என்பதை உணர்தேன். அந்த பதிலை விரிவுபடுத்தி கதையாக உருமாற்றினேன்.
அந்த கேள்வியும் பதிலையும் கடைசியில் இணைத்துள்ளேன்..
ஒரு காட்டிற்குள் குரங்கு ஒன்று வசித்து வந்தது. அந்த காட்டிற்குள் வசிக்கும் விலங்குகளை எப்போதும் துன்புறுத்தி மகிழ்வது அந்த குரங்கின் வழக்கம் இப்படியே அந்த குரங்கு தன் வாழ்க்கையை வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அந்த குரங்கின் கண்களில் ஒரு நாய் சிக்கியது அந்த நாயிடம் தன் வேலையை காட்ட துவங்கியது. நாய் குலைத்துக்கொண்டே குரங்கை கடிக்க துரத்தியது. குரங்கு அங்கிருந்து ஓடிச்சென்று அங்கிருந்த ஒரு குகைக்குள் ஒளிந்துகொண்டது. அந்த நாய் வெளியிலேயே நின்றபடி குலைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து அங்கு இருந்து சென்றுவிட்டது. அந்த குகைக்குள் இருட்டுக்குள் ஒரு மிருகம் இருப்பதை அந்த குரங்கு பார்த்தது. இருட்டில் பெரிய நாய் போல் அந்த மிருகம் குரங்கின் கண்களுக்கு தெரிந்தது. குரங்கு இந்த நாய்க்கு வயது அதிகமா இருக்கும் அதுதான் அமைதியாக படுத்து கிடக்கிறது என்று எண்ணி அந்த குகையில் இருந்து வெளியில் சென்றுவிட்டது. இதையே அந்த குரங்கு வழக்கமாகியது விலங்குகளை எதாவது துன்புறுத்திவிட்டு அவை துரத்தும் பொது மரத்தில் ஏறிக்கொள்ளும். ஒரு நாள் குரங்கின் கண்களில் எந்த மிருகமும் தென்படவில்லை. மிகவும் கவலைப்பட்டது. அப்போது ஒன்றை யோசித்தது அந்த வயதான நாய் குகையில் தானே இருக்கும் இன்று அந்த நாயை ஒரு வழி பண்ணிவிட வேண்டும் என்று எண்ணியது. குகைக்குள் சென்று பார்த்தது அங்கு அந்த மிருகத்தை காணவில்லை. எங்கு அந்த நாய் சென்று இருக்கும் என்று எண்ணியது அந்த குகைக்குள் சத்தம் போட துவங்கியது ஏன் என்னை கண்டு பயத்தில் ஒளிந்து கொண்டாயா நாயே என்று குகையில் வேறு எந்த சத்தமும் வரவில்லை. அந்த நாய் இறந்து இருக்கும் என்று நினைத்து வெளியில் செல்ல நினைத்தது. பின்னல் ஒரு மிருகம் நிற்பதை உணர்த்து நாய் என்று பார்க்க திரும்பியது ஒரே பாய்ச்சல் குரங்கின் கழுத்தை கவ்வி குருதியோடு உயிரையும் உறிஞ்சியது குரங்கின் உயிர் பிரியும் நேரத்தில்தான் குரங்கிற்கு தெரிந்தது அது நாய் அல்ல புலி என்று.


என் நண்பர் கேட்ட அந்த கேள்வி

எழுதியவர் : த.பிரவின் குமார் (8-Feb-23, 11:22 am)
சேர்த்தது : பிரவின் குமார் த
பார்வை : 146

மேலே