இட்டாரியா கட்டாரியா

வாப்பா நித்தியானந்தா, உன் மனைவிக்கு குழந்தை பொறந்திருச்சா?
@@@@@@
இரட்டை குழந்தைகள், சோதிடரே. ஆண் குழந்தைகள்.
புதன்கிழமை காலை அஞ்சு மணிக்கு.
@@@@@
பிரம்ம முகூர்த்தம். ரொம்ப நல்ல நேரம். சரி குழந்தைகள் பேரை முடிவு பண்ணீட்டீங்களா?
@@@@@@@
நீங்கள் தான் பேரு வைக்கணுமுங்க.
@@@@@@@
தமிழ்ப் பேருங்களை எல்லாம் நம்ம தமிழ் மக்கள் மறந்துட்டாங்க. அதனால இந்திப் பேருங்களை வைக்கிறது தான் தற்கால தமிழர் நாகரிகம். ஒரு பேரை நாம் சொல்லறேன். அதே மாதிரி இன்னொரு குழந்தையோட பேரை நீ தான் முடிவு செய்யணும்.
@@@@@@@@
இந்தில சில பேருங்கள்ல இரண்டு பெயர்ச் சொற்கள் இருக்கும். முதல் பேரு ஏதாவது பேரா இருக்கும். அதை ஒட்டி 'கட்டாரியா"னு வச்சுக்கிறாங்க. இதை ஒரு பையனுக்கு வச்சிட்டு. இன்னொரு பையனுக்கு இதே மாதிரி ஒரு பேரைச் சொல்லு.‌
@@@@@@
சோதிடர் ஐயா, கொங்கு பகுதியில கிராமப் புறங்களில் மாட்டு வண்டிகள் தடம் போகும். அந்த தடத்தின் இரண்டு பக்கமும் மரஞ்செடி கொடி வளர்ந்திருக்கும்.‌ அந்த வழியை 'இட்டாரி'னு சொல்லுவாங்க.‌ அதைக் கொஞ்சம் மாத்தி 'இட்டாரியா'னு வச்சிடலாமுங்க ஐயா.
@@@@@@@@
அருமை. அருமை. 'இட்டாரியா, கட்டாரியா' . 💯% பொருத்தமான பேருக்கு. யாருக்கும் இது மாதிரி அமையாதப்பா. வாழ்த்துகள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

எழுதியவர் : மலர் (11-Feb-23, 3:10 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 51

மேலே