விழித்தெழு தமிழ விரட்டும் முன்

நானும் என் அன்பு நண்பரும் அண்மையில் ஒரு நாள் ஒரு சிறு வேலை காரணமாக சென்னையில் உள்ள சவுக்கார்பேட்டை வரை செல்ல வேண்டி இருந்தது.எனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றோம். போகும் வழி எங்கிலும் ஒரே சாலை நெரிசலகா இருந்ததால் நாங்கள் அங்கு செல்ல சிறிது தாமதம் ஆனது. எனினும் ஒரு வழியாக சவுக்கார்பேட்டை வந்து சேர்ந்தோம்.
அங்கு என் கண்கள் கண்ட காட்சி..!
என் நெஞ்சை உடைத்தெறிந்து உருகுள்ளைய செய்தது. அங்கு ராஜஸ்தானில் இருந்து பிழைக்க வந்த ராஜஸ்தானிகள் குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைக்குள்ளே அவர்கள் பொருட்களை வியாபாரம் செய்துகொண்டும் மற்றும் பெரிய அடுக்கு மாடி குடியருப்புகலிலும் இருந்தனர்.
ஆனால் நம் நிலத்தின் பூர்வ சொந்தங்கள் ராஜஸ்தானிகள் புகையிலை போட்டு துப்பும் சாலை ஓரங்களில் காய்கறிகள் விற்று கொண்டும். சுமைதூக்கும் வண்டி ஓட்டிக்கொண்டும் இருந்தார்கள். அதை கண்ட மறுநொடி மனதில் இனம் புரியாத அச்சம். நமது அன்பிற்கினியா அண்ணன் நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்கள் நடித்திருந்த தெனாலிராமன் என்ற திரைப்படம் மனதில் ஓட துவங்கியது. மனம் உடைந்து போனேன். இந்த அவலநிலை என் தமிழ் சொந்தங்களுக்கா.? அங்கு குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைக்குள் வியாபாரம் செய்யும் ஒரு ராஜஸ்தானி இளைஞரிடம் உனக்கு ஒரு நாள் வருமானம் என்ன கிடைக்கும்.? என்று கேள்வி எழுப்பினேன். அவன் கூறியது 15000 இருந்து 20000 வரும் என்று கூறினான். வியப்படைந்தேன் மற்றொரு கேள்வி எழுப்பினேன் உனக்கு மகிழுந்து (கார்) உண்ட.? என்று அவன் கூரிய பதில் இல்லை. ஏன் வங்கும் அளவில் உன் வருமானம் உள்ளதே என்று கேட்டேன். அவன் கூரிய அடுத்த பதில் "அது ஆடம்பரம்" என்று எனக்குள் இருந்த அனைத்து கேள்விக்குமான பதில் அது.

இதற்கு முன்பு இதற்கான பதில் என்னிடமே இருந்தது திருவள்ளூரில் நம் தமிழ் சொந்தம் ஒருவர் என்னிடம் கூறியது நினைவுக்கு வந்தது. அவர் ஒரு வன்பொருள்( ஹார்ட்வர்ஸ்) கடை நடத்தி வருகிறார். அவரிடம் 20 வடஇந்தியர்கள் வேலை செய்து கொண்டு உள்ளனர் அவரிடம் நான் கேட்டேன் அண்ணா நம் தமிழ் நாட்டில் வேலைக்கு ஆள் இல்லையா.? என்று. அவர் கூரிய பதில் நமவர்கள் இப்பொதுலம் உக்காந்தா இடத்தில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்துகொண்டு உழைப்பை விட்டு வெளியேறி விட்டனர். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விட்டனர் இன்று உழைபவனுகே உழைக்காதவனும் இந்த உலகம் அடிமை என்று. அன்று அறிந்த பதிலின் கேள்வி இன்று தான் அறிந்தேன்.

தமிழா உன் உழைப்பை விட்டு வெளியேறி செல்கிறாய் அந்த இடத்தை இன்று நிரப்ப தயார் நிலையில் இருப்பவர்கள் நாளை உன் தமிழகத்தில் உனக்கான எல்லாம் இடத்தையும் நிரப்ப தயார் நிலையில் உள்ளார்..!
விழித்தெழு தமிழா உன்னை விரட்டும் முன்..!

எழுதியவர் : த.பிரவின் குமார் (7-Feb-23, 3:03 pm)
சேர்த்தது : பிரவின் குமார் த
பார்வை : 39

மேலே