வெடித்துவிட வேண்டுமடி
பனியனை நீபோட்டு அலையாதடி - உன்
குலுங்கும் இளமை என்னை குலுக்கிவிட்டதடி!
இனியும் என்னால் பொறுக்கமுடியாதடி - காட்டு
முனியன் ஏறி என்னை ஆட்டுவிக்கிறானடி!
தனியாய் நின்று இப்படி புலம்பவிட்டாயடி - உன்
கனியும் கன்னம் என்னை கட்டிப்போட்டதடி!
பனியும் சூடாய் கொதிக்கிறதடி - உன்கண்ணில்
கனியும் காதல் என்னை கவர்ந்துவிட்டதடி!
குதியாட்டம் நீபோட்டு ஓடுகையில் என் இதயம்
குத்தாட்டம் போட்டு தினம் ஆடுதடி!.
அருகினில் நீவந்து நிற்கையில் உன்வாசம்
நெருக்கியே என்நினைவை தாக்குதடி!
கைகோர்த்து நீயும்நானும் நடக்கையில்
தெருவெங்கும் ஆயிரம் கண்கள் முளைக்கிறதடி!
வாய் விட்டு நாம் அங்கு சிரித்துவிட்டால் பூமியெங்கும்
பூந்தோட்டம் விரிந்து மனம் வீசுதடி!
நாம் இணைந்து கிடக்கையில் காலக்கடிகாரம்
மெதுவாக சுழல வேண்டுமடி - நீயென்னை
பிரிந்து வாட்டும் நாட்களில் அது வேகமாய்
சுழன்று வெடித்துவிட வேண்டுமடி!