உண்மையான பொய்ப்பல்லு

ஒரு பல்மருத்துவமனையில்

நோயாளி: உங்களுக்கு என்ன பிரச்சினை?

நோயாளி 1 : உங்களுக்கு என்ன பிரச்சினை?

நோயாளி: பல்லில் பிரச்சினை

நோயாளி 1 : எனக்கும் அதுதான்

நோயாளி: எந்தப்பல்லில் உங்களுக்குப் பிரச்சினை?

நோயாளி 1 : எனக்குப் பொய்ப்பிரச்சினை

நோயாளி: உண்மையாவா? அது என்ன பொய்ப்பிரச்சினை?


நோயாளி: நீங்க உண்மையிலேயே பொய்ச்சொல்லுறீங்க போல்தெரியுது

நோயாளி 1 : இல்லீங்க உண்மையைத்தான் சொல்லுறேன். எனக்கு பொய்ப்பல் பிரச்சினைதான். ஒரு மாசத்துக்கு முன்னாலே, மேலுதட்டுக்குப் பின்னாலே வச்ச பொய்ப்பல் நேத்துக் கரும்பு கடிக்கும்போது உடைந்துவிட்டது.

நோயாளி: இதை டாக்டரிடம் சொன்ன கோவிச்சுக்குவாரே?

நோயாளி 1 : ஏன் டாக்டருக்கு கரும்புன்னா பிடிக்காதா?

நோயாளி: அப்படி இல்லை. பொங்கல் பண்டிகை முடிஞ்சி ரெண்டு வாரம் ஆகுது. ஏன் பொங்கல் அன்றைக்கே கரும்பு கடித்து தின்னவில்லை என்று கேட்பார்.

நோயாளி 1 : நீங்க வேறங்க. பொங்கல் அன்னிக்கு எனக்கு அந்தப்பல்லு ஒரிஜினலாத்தான் இருந்தது. பொங்கல் அன்னிக்கு என் மனைவி சொன்னதினால் கரும்புக் கடித்துச் சாப்பிடும்போதுதான் சொந்தப்பல்லு ஒடஞ்சது. அடுத்தநாள் காலையில் இந்தப் பல் டாக்டரிடம் தான் காட்டினேன். ஒடஞ்ச பல்லையும் அவரிடம் காட்டி " டாக்டர் இதையே எனக்குப்பொறுத்திவிடுங்கள்" என்று சொன்னபோது " இந்தப் பல்லை பார்த்தால் நாய் கூட பயந்து ஓடிப்போய்விடும்" அப்படீன்னு சொன்னார்.
நான் சிரித்துக்கொண்டே சொன்னேன் " டாக்டர் ஆனால் என் மனைவி என்னை பார்த்து பயந்து ஓடுவதில்லையே" என்று. அதற்கு அந்த யமகாதாக டாக்டர் " அதுக்கு பதில்தான் நீங்க அவங்களைப் பார்த்துப் பயப்படுறீங்களே" என்று ஒரு போடு போட்டாரே பாரு.

நோயாளி: அய்யய்யோ , அப்படிப்போடும்போது உங்கள் ஒரிஜினல் பல்லையும் கீழே போட்டுட்டாரா?

நோயாளி 1 : ஆமாம்பா. " இந்தப்பல்லை எங்கவீட்டு நாய்க்கு பிக்ஸ் பண்ணிடறேன். அதுக்கும் முன்னால ஒரு பல்லு இல்லை. அதுக்கும் கிட்டத்தட்ட உன் பல்லு மாதிரியே தான் இருக்கும். உனக்கு செராமிக்ஸ் பல்லு ஒன்னு கட்டி விடுகிறேன். அதற்கு முன்னாலே நீ 5000 ரூபாய் பணம் கட்டிவிடு" என்று டாக்டர் சொன்னதன் பேரில் பணத்தை கட்டிவிட்டேன்.

நோயாளி: இது என்ன அநியாயம், உன்னோட பல்லை ஓசியில் வாங்கிண்டு உன் தலையில் 5000 ரூபாயை கட்டிவிட்டாரே.

நோயாளி 1 : ஆனால் எனக்குப் பொய்ப்பல் வைக்க டாக்டர் பீஸ் எதுவும் வாங்கிக்கவில்லை. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் , அவர் செராமிக்ஸ் பல்லை வச்சாரா இல்லை கான்கிரீட் மிக்ஸ் பல்லை வச்ச்சாரான்னு தெரியல. ரெண்டே வாரத்தில் பல்லு உடஞ்சிபோச்சு. ம் ம் ம்… ஆமாம்… நீங்க எங்கே புறப்படறீங்க டாக்டரைப் பார்க்காமல்.

நோயாளி: எனக்கும் மெய்யாலுமே பொய்ப்பல்தான் கட்டிக்கவேண்டும். ஆனால் இந்த டாக்டரிடம் கட்டிக்கமாட்டேன்.
நோயாளி 1 : ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (10-Feb-23, 7:26 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 55

சிறந்த நகைச்சுவைகள்

மேலே