பாறாங்கல் பல் மருத்துவமனை
நோயாளி: என் மனைவியுடன் சண்டையிட்டு இரண்டு பற்களை இழந்தேன்.
டாக்டர்: அவளால் எப்படி ஒரே நேரத்தில் இரண்டு பற்களை அகற்ற முடியும்?
நோயாளி: இரண்டுமே செயற்கைப் பற்கள். ஒரு சண்டையின் போது, திடீரென்று அவள் என் வாயைத் திறக்கச் சொன்னாள். வழக்கம் போல், நான் கீழ்ப்படிந்தபோது, அவள் மின்னல் வேகத்தில் என் இரண்டு செயற்கைப் பற்களை வெளியே இழுத்து, எங்கள் குடியிருப்பின் பதினைந்தாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக வெளியே வீசி எறிந்தாள்.
டாக்டர்: சரி. கவலை வேண்டாம். நான் அவற்றை பீங்கான் பூசப்பட்ட வலுவான பற்களால் மாற்றுவேன்.
நோயாளி: என் மனைவி மீண்டும் என் புதிய பற்களை அகற்ற மாட்டாள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
டாக்டர்: அவள் முன் வாயைத் திறக்காதே.
நோயாளி:???
&&&
தியேட்டர் அசிஸ்டென்ட்: ஏன் ஆறு மாசத்துக்கும் மேல இவ்வளவு அதிகமான பல் வலியோடு காத்துக்கிட்டு இருந்தீங்கன்னு வியப்பாக இருக்கு.
நோயாளி: என் மனைவி என் உடற்கூறியல் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவள், மற்றும் சேமிப்பதில் கைதேர்ந்தவள். ஆறு மாதங்களுக்கு முன்பு, எனக்கு பல் சிதைந்துவிட்டது என்று நான் கூறியபோது, அவள் என் வாயைத் திறந்து, இரண்டு பற்கள் ஏற்கனவே சிதைந்துவிட்டன, இன்னும் சில மாதங்களில் இன்னும் இரண்டு பற்களும் சிதைந்துவிடும் என்று சொன்னாள்.
தியேட்டர் அசிஸ்டென்ட்: முன்பே பழுதடைந்த பற்களை எங்களிடம் வந்து ஏன் பிடுங்கிக்கொள்ளவில்லை?
நோயாளி: நானும் இதைத்தான் என் மனைவியிடம் சொன்னேன். அவளோ என் சிதைந்த பல்லை உடனடியாக அகற்ற வேண்டாம், இன்னும் இரண்டு பற்களும் சிதைந்துபோனவுடன் நான்கு சிதைந்த பற்களையும் ஒன்றாகப் பிடுங்கிக்கொள்ளலாம் என்று பரிந்துரைத்தாள். அப்படிச் செய்தால் 1. மயக்க மருந்துக்கான செலவு 2. பல்பிடுங்கும் செலவு செலவு 3. பல்பிடுங்கியபின் கொடுக்கும் மருந்துகள் மற்றும் 4. நான்கு பற்களை ஒரேநேரத்தில் எடுப்பதால் சிறப்பு தள்ளுபடி இவற்றின் மூலம் கொஞ்சம் பணத்தை சேமிக்கலாம் என்று அறிவுரை கூறி, இரண்டு பற்களின் வலியை கொஞ்சம் வாயில் உப்பை வைத்துக்கொண்டு பொறுத்துக்கொள்ளும்படி கூறிவிட்டாள்.
தியேட்டர் உதவியாளர் அதிர்ச்சியடைந்து நோயாளியை ஐந்து நிமிடங்கள் உற்றுப் பார்த்தார், அதே நேரத்தில் அவருடைய (தியேட்டர் உதவியாளர்) வாயைத் திறந்து கண்ணாடியில் பார்த்து, ஏதேனும் பல் சொத்தை இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டார்.
&&&
டாக்டர்: பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு நான் உங்களுக்கு பொருத்திய இரண்டு பீங்கான் பற்கள் என்ன ஆனது?
நோயாளி: உங்கள் செவிலியர் அதை அப்புறப்படுத்திவிட்டார்.
டாக்டர்: அவளுக்கு எவ்வளவு தைரியம்?
நோயாளி: அவள் என் மருந்துகளை கொடுத்தபோது நான் அவளைப் பார்த்துச் சிரித்து "நான் புதிதாகப் பொருத்தப்பட்ட என் பீங்கான் பற்களால் உங்களக் கடிக்க விரும்புகிறேன்" என்று நகைச்சுவையாகச் சொன்னேன். ஆனால் அவள் ஒரு கொடூரமான திறமையான பல் மருத்துவரைப் போல நடந்துகொள்வாள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, அதுவும் அவளது வெறும் கைகளால்.
டாக்டர்: ???