லிமரைக்கூக்கள்

# லிமரைக்கூக்கள்


தேனீயை மிஞ்சுமென் உழைப்பு
சக்கையாய் பிழிந்து எடுத்து விடுகிறார்கள்
இதெல்லாம் ஒரு பிழைப்பு


கவிதையைத் திருடும் கூட்டம்
அடுத்தவர் பிள்ளைக்கு தலைப்பு எழுத்திடுவதை
தடுத்திட வேண்டும் சட்டம்


சம்சாரம் அது மின்சாரம்
தொட்டாலும் தொடா விட்டாலும் அதிர்ச்சியே
அதிசய பிறவியென்பதே சமாச்சாரம்


# ராஜூ ஆரோக்கியசாமி

எழுதியவர் : Raju Arockiasamy (10-Feb-23, 11:08 pm)
சேர்த்தது : RajuArockiasamy
பார்வை : 43

மேலே